×

தாவரவியல் பூங்காவில் பூத்துள்ள கிரீஸ் நாட்டு ரெணின்குலாஸ் மலர்கள்

ஊட்டி,  மார்ச் 21:  ஊட்டி தாவரவியல் பூங்காவில் ரோஜா மலர்களை ேபான்றே காணப்படும்  ரெணின்குலாஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் பல வகையான மலர்கள் உள்ளன.   இங்குள்ள மலர்களில் பெரும்பாலான மலர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவை. இவைகளை  முறயைாக பராமரித்து வருவதுடன், அவைகள் அழிந்து போகாமல் இருக்கவும், ஆண்டிற்  ஆண்டு அவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் தோட்டக்கலை துறையினர் முனைப்பு  காட்டி வருகின்றனர். இதில், சில வகை மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக  கவர்ந்து வருகின்றனர். இந்த மலர்களில் ரெணின்குலாஸ் மலர்கள் முக்கியமான  பங்கு வகிக்கிறது.

 இந்த மலர் கிரீஸ் நாட்டை சேர்ந்தது. இந்த மலர்கள்  500 வகைகளையும், பல வண்ணங்களையும் கொண்டுள்ளது. இந்த மலர்கள் அங்கு வியாபார  ரீதிக்காவும், அழகிற்காகவும் வளர்க்கப்படுகிறது.
 தற்போது ஊட்டி அரசு  தாவரவியல் பூங்காவிலும் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது  பூங்கா மலர் கண்காட்சிக்காக தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், மலர்களே  இல்லாத நிலையில், கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள இந்த ரெணின்குலாஸ்  மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரோஜா மலர்களை போன்றே  காணப்படுவதால், இந்த மலர்களை கண்டு பலர் ரோஜா மலர்கள் என எமாற்றமும்  அடைகின்றனர். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி,  அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Tags : botanical garden ,
× RELATED கண்ணாடி மாளிகையில் தூலிப், லில்லியம் மலர் அலங்காரம்