×

ஆரணி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டவை காவல் நிலையத்தில் இருந்து மீண்டும் மணல் கடத்தல் கண்டுகொள்ளாத காவல்துறை

ஆரணி, மார்ச் 21: ஆரணி நகர காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளில் இருந்து மணல் கடத்தல் நடைபெறுவதை  கண்டுகொள்ளாத காவல்துறையால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கமண்டல நாக நதி மற்றும் செய்யாற்றுப்படுகை ஆகிய ஆறுகளில் இருந்து தினந்தோறும் இரவு, பகலாக மணல் கொள்ளை நடக்கிறது. மணல் கடத்தும் மாபியாக்கள் மற்றும் வாகனங்கள் மீது போலீசார், வருவாய்த் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்நிலையில் கண்துடைப்பிற்காக ஒரு சில வாகனங்களை மட்டும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்கின்றனர். அந்த வாகனங்கள் ஆரணி நகர காவல் நிலையம், ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் கொண்டுவந்து விடுகின்றனர்.

அவ்வாறு விடப்படும் வாகனங்களில் உள்ள மணலை மற்றொரு வாகனங்கள் மூலமாக, பகல், இரவு நேரங்களில் கடத்தி செல்கின்றனர். அவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுகின்றனர். பறிமுதல் செய்யப்படும் வாகனங்களில் இருந்து, போலீஸ் நிலையத்தில் இருந்தே மீண்டும் கடத்தப்படுவது பொதுமக்களை ஆச்சரியப்படுகிறது. இல்லை என்றால் போலீசாரோ மணலை விற்பனை செய்கிறார்களா? என கேள்வி எழுப்புகின்றனர். எனவே, ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கொள்ளையும், காவல் நிலையத்தில் மணல் திருடப்படுவதையும் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Arani ,
× RELATED ஜேசிபி, டிப்பர் லாரிகளை சிறைபிடித்த...