×

தேர்தல் நடத்தை விதியை மீறினால் மதுக்கடைகளின் உரிமம் ரத்தாகும் தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை

திருவாரூர்,பிப்.19: தேர்தல் நடத்தை விதியை மீறினால் மதுக்கடைகளின் உரிமம் ரத்தாகும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாவது: தேர்தல்  நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அந்தந்த மாவட்டத்தில் அனைத்து கள்,  சாராய கடை உரிமையாளர்கள் தேர்தல் துறை அறிவித்த நேர கட்டுப்பாட்டை அவசியம்  கடை பிடிக்க வேண்டும். அனைத்து கடைகளிலும் சிசி கேமரா என்ற கண்காணிப்பு  கேமரா பொருத்த வேண்டும். கேமராவை பொருள் விற்பனை செய்யு மிடம், கடையின்  வெளிப்புறத்தை பார்த்த அமைப்பில் அமைக்க வேண்டும். கடைகள் தினமும்  திறந்து, மூடுவதற்கு அனுமதிக்கப்பட்ட நேரம் காலை 6 முதல் இரவு 10 மணி வரை  என்பதை கண்டிப்பாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். சரக்கு களுக்கு  பெர்மிட் போடுவதும் காலை 6 முதல் பகல் 10 மணிக்குள் முடித்துவிட வேண் டும்.  கூடுதல் நேரமோ, முன்கூட்டியோ கடையை திறந்து வியாபாரம் செய்யக் கூடாது.

முக்கியமாக,  வாக்குப்பதிவு நாளின் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் கடை களை  மூடிவிட வேண்டும். விற்பனையை அளவுக்கு அதிகமாக யாருக்கும் செய்யக் கூடாது.  குறிப்பாக மொத்தமாகவோ, சிறுவர்களுக்கோ மதுபான விற்பனை முற்றிலும் கூடாது.  கடையில் வைத்திருக்கும் மதுபானத்துக்கு விற்பனை, இருப்பு குறித்த பதி  வேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக  மதுக்கடையினர் கடைப்பிடிக்க வேண்டும். எந்தவொரு தவறான செயலிலும் ஈடுபடுவது  தேர்தல் துறைக்கு தெரியவந்தால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Election Commission ,
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...