×

உணவுப்பொருட்களில் கலவை விபர குறிப்புச்சீட்டு அவசியம் அதிகாரிகள் எச்சரிக்கை

பழநி, மார்ச் 19: உணவுப்பொருட்களில் லவைகள் விபரங்கள் குறிப்புச்சீட்டு வைத்திருக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு அலுவலர் ராமமுர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.பழநி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21ம் தேதி நடக்கிறது. ஆனால் தற்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநி கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களிடம் விற்பனை செய்வதற்காக அடிவார பகுதிகளில் ஏராளளான தற்காலிக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு விளையாட்டு பொருட்கள், சிப்ஸ், கற்கண்டு, பேரீட்சை, அல்வா போன்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சில கடைகளில் கலப்பட, தரமற்ற திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.உணவுப்பொருட்கள் விற்பனை செய்வது குறித்து பழநி உணவு பாதுகாப்பு அலுவலர் ராமமூர்த்தியிடம் கேட்டபோது கூறியதாவது,பக்தர்களுக்கு தரமான, பாதுகாப்பான, கலப்படமில்லாத, காலாவதியாகாத உணவு பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும். உணவுப்பொருட்களை கையாள்வோருக்கு தொற்றுநோய் எதுமில்லை என உடல்நலத்தகுதி சான்று கட்டாயம் பெற்றிருத்தல் வேண்டும். உணவுப்பொருட்களை தயாரிக்க பாதுகாக்கப்பட்ட குடிநீரையே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இயற்றை அல்லது செயற்கை நிறங்களை சரியான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். காலவதியான எண்ணெய்கள், அனுமதிக்கப்படாத செயற்கை நிறங்களை பயன்படுத்த கூடாது. உணவுப்பொருட்களை தயாரிக்க பயன்படும் நெய், வனஸ்பதி மற்றும் எண்ணெய் வகைகளை வாடிக்கையாளர்கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகையில் தெரியப்படுத்த வேண்டும்.

விற்பனைக்கான உணவுப்பொருட்களை மூடிய நிலையில், ஈக்கள், பூச்சிகள் மற்றும் தூசிகள் விழாதவாறு முறையாக கண்ணாடி பெட்டியினுள வைத்து விற்பனை செய்ய வேண்டும். தயாரிப்பு தேதி, நிகர எடை, காலாவதி தேதி மற்றும் உணவுப்பொருட்களில் கலந்துள்ளக லவைகள் விபரங்கள் குறிப்புச்சீட்டு வைத்திருக்க வேண்டும். எச்சரிக்கை ஏதாவது இருந்தால் அதுகுறித்த விபரங்களை குறிப்பிட வேண்டும். உணவுப்பொருட்களை சாக்கடையின் மேல் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. மினரல் ஆயில் போன்ற எண்ணெய்களை பேரிச்சையில் தடவி விற்பனை செய்யக்கூடாது. நகர்ப்பகுதியில் உணவுத்தொழில் செய்வதற்கு உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகத்துறையினரிடம் பதிவு அல்லது உரிமம் பெறுவது அவசியம். இவ்விதிமுறைகளை பின்பற்றாத கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags :
× RELATED சாலை விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலி