×

பான் செக்கர்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி துவக்க விழா 3 அமைச்சர்கள் பங்கேற்பு


மன்னார்குடி, பிப். 22: அடைக்கல அன்னை கன்னியர் சபை தலைவர் அருட்சகோதரி மரிய பிலோமி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, கல்விப்பணியில் கடந்த 180 வருடங்கள் அனுபவம் வாய்ந்த அடைக்கல அன் னை கன்னியர் சபையால்   பான் செக்கர்ஸ் மகளிர் கலை அறிவியல் கல் லூரி மன்னார்குடியில்   துவக்கப்பட உள்ளது. பெண்கள் விடுதலைக்கும், உயர்வுக்கும் எப்போதும் முன்னுரிமை தருவதில் அடைக்கல அன்னை கன்னியர் சபை ஏறத்தாழ 75 ஆண்டுகளாக மன்னார்குடி நகரில் கல்வி பணி யாற்றி வரும் அருட்சகோதரிகளால் இப்பகுதியில் வாழும்  வளர்ச்சியில் கொள்ளும் வகையில் இக்கல்லூரி துவக்கப்படவுள்ளது.இக்கல்லூரியில் நடப்பு 2018 - 19 கல்வியாண்டில்  ஆண்டில் பிகாம், பிபிஏ, பிஏ ஆங்கிலம், கம்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி கணிதம் என 5 பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டு 2019 - 20  முதல் பிஎஸ்சி பேஷன் டெக்னலாஜி, பிஎஸ்சி பிசிக்ஸ், பிஎஸ்சி சுவாலஜி, பிசிஏ, பிகாம் சிஏ ஆகிய 5 பிரிவுகளும் செயல் பட உள்ளது. இந்நிலையில் மன்னார்குடியில்  பான் செக்கர்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி துவக்க விழா  இன்று ( 22ம்தேதி) காலை 10 மணியளவில் நடை பெற உள்ளது. இவ்விழாவில் அமைச்சர்கள் காமராஜ், அன்பழகன், கடம்பூர் ராஜ்,  கலெக்டர் ஆனந்தன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் மணிசங்கர், தஞ்சை மண்டல உயர்கல்வித்துறை இணை இயக்குனர் அறிவுடைநம்பி, தஞ்சை பேராயர் தேவதாஸ் அம்புரோஸ்  ஆகி யோர் பங்கேற்க உள்ளனர் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ministers ,opening ceremony ,Pan Chekker Arts Arts Science College ,
× RELATED தொண்டியக்காடு கிராமத்தில் 87 பயனாளிகளுக்கு 2 ஏக்கருக்கான பட்டா