தா.பழூர் அருகே உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு

தா.பழூர், பிப்.15:  தா.பழூர் அருகே உடைந்த குடிநீர் குழாய் தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே அணைக்குடம் கிராமம் உள்ளது. ஜெயங்கொண்டம் - கும்பகோணம் செல்லும் சாலையில் மேற்கு பகுதியில் அணைக்குடம் காலனி தெரு உள்ளன. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் வீடுகளின் வாசல் பகுதியில் தண்ணீர் சூழ்ந்து குளம்போல காட்சி அளிக்கிறது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி வீடுகளை சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் தூக்கமின்றி தவித்து வந்தனர்.
கேபிள் ஒயர்கள் தண்ணீரில் கிடந்ததால் உயிர் பயத்துடன் மக்கள் இருந்து வந்தனர். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்ததால் இரவு நேரங்களில் கொசுக்கள் அதிகமாகி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.
உடனே தண்ணீர் வடிய வழிவகை செய்யும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாயில் ஏற்பட்டிருக்கும் உடைப்பை சரி  செய்ய வேண்டியும், சாலையோரம் கழிவு நீர் வாய்க்கால் அமைத்து மழை காலங்களிளும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் அரசு அதிகாரிகள் விரைந்து வந்து கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கும், தினகரன் நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.

× RELATED தா.பழூர் அருகே தீவிபத்தில் வைக்கோல் போர் சாம்பல்