சேந்தமங்கலம் வேதலோக வித்யாலயா பள்ளியில் சாலை பாதுகாப்பு வாரவிழா

சேந்தமங்கலம், பிப்.15: சேந்தமங்கலம் வேதலோக வித்யாலயா பள்ளியில் சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டது.சேந்தமங்கலம் வேதலோக வித்யாலயா பள்ளியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி அப்பள்ளியில் படிக்கும் 3 முதல் 15 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாளாளர் குரு தலைமை தாங்கினார். தலைவர் சுதா குரு தொடங்கி வைத்து பேசினார். பள்ளி மைதானத்தில் 1600 மாணவ, மாணவிகள் ஹெல்மெட் வடிவில் அமர்ந்து மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும், சாலை பாதுகாப்பு குறியீடுகளை காண்பித்தும் விளக்கமளித்தனர். அதில், சமூகத்தில் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிப்புகளை தடுக்கும் விதமாக பள்ளி மாணவ, மாணவிகள் பேசினர். அப்போது, “ஒவ்வொருவரும் தங்களின் பெற்றோர்கள் சுற்றுப்புறத்தை சேர்ந்தவர்களிடம் சாலை விதிகளை தெரிவிப்போம். ஒரு சொல் ஒரு உயிர் காப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


× RELATED சுற்றுலா பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு துண்டு பிரசும்