×

சவுளூர் பகுதியில் விற்பனைக்காக குவிந்த வாத்துகள்

தர்மபுரி, பிப்.15: தர்மபுரி அருகே ஆம்பூர் வாத்துக்கள், இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஜோடி ₹280க்கு விற்கப்படுகிறது. தர்மபுரி குமாரசாமிபேட்டை சவுளூர் பகுதியில் வாத்துகள் விற்பனைக்கு வந்துள்ளது. அப்பகுதியில் பட்டி அமைத்து, வாத்துகளை அடைத்து வைத்துள்ளனர். அதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துக்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. அவற்றை தாபா ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்களுக்கு விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களிருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஒரு வாத்து ₹150ம், ஜோடி ₹280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  இதுகுறித்து வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த விற்பனையாளர் கோபால் கூறுகையில், ‘நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக வாத்து வளர்த்து விற்பனை செய்து வருகிறோம். அசைவ ஓட்டல்களுக்கு விரும்பி வாங்கி செல்கின்றனர். தற்போது அறுவடை செய்த வயலில், வாத்துக்கு பட்டி அமைத்து வளர்த்து வருகிறோம். வயல்களில் ஈரப்பதம் இல்லாததால் செயற்கை குளம் அமைத்துள்ளோம். ஆடுகளின் மேய்ச்சல் நிலமாக இருக்கும் வயல்களில், வாத்துக்களை மேய்ச்சலுக்கு அழைத்து செல்கிறோம்’ என்றார். வாத்து இறைச்சி சாப்பிட்டால் ஆஸ்துமா நோயின் தாக்கம் குறையும் என நம்பி, வாத்துக்களை ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர்.

Tags : area ,Southallur ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...