×

தார்சாலை பணி தீவிரம் ₹358.95 கோடியில் மொரப்பூர்-தர்மபுரி ரயில் பாதைக்கு அனுமதி

தர்மபுரி, பிப்.15: மொரப்பூர்- தர்மபுரி ரயில் பாதை திட்டத்திற்கு ₹358.95 கோடியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என, தென்னக ரயில்வே நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.  தர்மபுரி பாராளுமன்ற தொகுதி எம்பி அன்புமணி ராமதாஸ், கடந்த 5ம் தேதி தர்மபுரியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மொரப்பூர்- தர்மபுரியை இணைக்கும் ரயில்வே திட்டத்திற்கு, ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் தர்மபுரி மாவட்ட மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் 36 கிலோ மீட்டருக்கு ₹358.95 கோடி மதிப்பீட்டில் மத்திய ரயில்வே துறையே இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது என கூறியிருந்தார். இத்திட்டம் கடந்த ஜனவரி 16ம் தேதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னக ரயில்வே துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில்வே நிர்வாகத்தால், தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் இருந்து தர்மபுரி வரையிலான 36 கிலோ மீட்டருக்கான ரயில்வே பாதை அமைக்க ₹358.95 கோடியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் 2 பெரிய பாலங்கள், 5 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள், 15 இடங்களில் சிறிய நுழைவு பாலங்கள், 24 இடங்களில் சிறிய பாலங்கள் மற்றும் மொரப்பூர், ராணிமூக்கனூர், மூக்கனூர், தர்மபுரி ஆகிய 4 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Morrapur-Dharmapuri Railway ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா