×

மின்மோட்டாரை எடுக்க முயன்ற போது கிணற்றுக்குள் தவறி விழுந்து பெண் பலி

கடத்தூர், பிப்.15: கடத்தூர் அருகே கிணற்றுக்குள் இருந்த மின்மோட்டாரை பழுது பார்ப்பதற்காக மேலே இழுத்த போது, கயிறு காலில் மாட்டிக் கொண்டதில் 110 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே சுங்கரஅள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராமச்சந்திரன்(36). இவரது மனைவி கல்பனா(31). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு சொந்தமான 110 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் இருந்த மின்மோட்டார் பழுதடைந்தது.  அதை சரி செய்வதற்காக, கிணற்றில் இருந்த தண்ணீரை இறைத்து விட்டு, உறவினர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்த மின் மோட்டாரை, ைபப்புடன் மேலே இழுக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக மின் மோட்டாரில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து விழுந்து, மின் மோட்டார் கிணற்றுக்குள் விழுந்தது.
 அப்போது, கயிற்றின் ஒரு முனை கல்பனாவின் காலில் சிக்கிக் கொண்டதால், கிணற்றில் விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், கிணற்றில் விழுந்த கல்பனாவின் உடலை மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடத்தூர் ேபாலீசார், கல்பனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா