200க்கும் மேற்பட்டோர் குவிந்தனர் எங்களுக்கும் ரூ.2000 கிடைக்குமா? தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் பரபரப்பு

விருதுநகர், பிப். 14: தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் பெறுவதற்காக விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, ரூ.2000 ஆயிரம் வழங்கப்படும் என 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் அறிவித்தார். இதனையடுத்து, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் நலவாரியத்தில், ரூ.2000க்கு பதிவு செய்ய நேற்று 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குவிந்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அலுவலர்கள் சிலர் கூறுகையில், ‘தொழிலாளர் நல வாரியத்தில் 90க்கும் மேற்பட்ட முறை சாரா தொழில்களை செய்யக்கூடியவர்கள் பதிவு செய்து பயனடையும் பட்சத்தில், ரூ.2000க்கு புதிதாக பதிவு செய்வது எந்தவிதத்திலும் பயனளிக்காது என தெரிவித்தனர்.

× RELATED அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவேன்