×

அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையே போட்டி

ஊட்டி, பிப். 14: அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் சார்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
 தேசிய அறிவியல் தினம் ஆண்டு தோறும் பிப்.,28ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது ராமன் விளைவு கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதை கொண்டாடும் வகையில் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ‘ஊட்டி முத்தோரை பாலாடா பகுதியில் அமைந்துள்ள ரேடியோ வானியல் மையத்தில் தேசிய அறிவியல் தினம் பிப்., 28ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.  
இந்நிலையில், ஊட்டி வானியியல் ஆய்வு மையத்தில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கிடையே கட்டுரை போட்டி, வினாடிவினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் அறிவியல் தினத்தற்கு வழங்கப்படும் என வானியியல் ஆய்வு மைய தலைவர் மனோகரன் தெரிவித்தார்.

Tags : Competition ,schools ,
× RELATED அரிமளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டி