×

பெரம்பலூர் அருகே அசூரில் மனுநீதி நிறைவு நாள் முகாமில் 377 பேருக்கு நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்

பெரம்பலூர்,பிப்.14: பெரம்பலூர் அருகே அசூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் விழாவில் 377 பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகளை கலெக்டர் வழங்கினார்.பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அசூர் கிராமத்தில் மனுநீதி நிறைவு நாள்விழா நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைக ளைச் சேர்ந்த திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறு வதற்கான வழிமுறைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறைஅலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வருவாய்த்துறை மூலம் 154 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித் துறைமூலம் 51பயனாளிகளுக்கும், கால்நடை பராமரிப்பு துறையின் இலவச வெள் ளாடு வழங்கும் திட்டத்தின் மூலம் 129 பயனாளிகளுக்கும், வேளாண்மைத் துறை மூலம் 16பயனாளிகளுக்கும், கூட்டுறவுத் துறைமூலம் 9பயனாளிகளுக்கும், மாவட்டத் தொழில்மையம் மூலம் 2பயனாளிகளுக்கும் என பல்வேறு துறைகளின் சார்பில் 377 பயனாளிகளுக்கு ரூ1,21,06,260 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.
இதில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்டஇயக்குநர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் (பொ) சேதுராமன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Assistant Collector ,Perambalur ,Assam ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி