சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு விடுவதை கைவிட கோரி கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

பெரம்பலூர்,பிப்.14: சாலைப் பராமரிப்பு பணிகளை தனியாருக்குத் தாரை வார்ப்பதை கைவிடக்கோரி, பெரம்பலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலு வலகம்முன்பு சாலைப்பணியாளர்கள் தங்கள் கைகளில் கருப்புக்கொடியேந்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41மாத பணிநீக்க காலத்தை பணிக்கால மாக அறிவித்து ஆணை வழங்கிட வேண்டும்.      பணிநீக்க காலத்தின்போது இறந்து போன சாலைப் பணியாளர்களின் குடும்பத் திற்கு அரசு விதிமுறைகளைத் தளர்த்தி வாரிசுஅடிப்படையில் பணிவழங்க வேண்டும். சாலைப் பராமரிப்புப் பணிகளை தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கைவிட்டு, அரசே ஏற்றுநடத்த வேண்டும். சாலைப்பணியாளர்கள் அனைவருக்கும் கருவூலத்துறை மூலம் ஊதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சுப்ரமணின் தலைமை வகித்தார்.

மாவட்ட துணைத் தலைவர்கள் இராமநாயகம், ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழுஉறுப்பினர் மணிவேல் துவக்கவுரை பேசினார். மாவட் டச் செயலாளர் சி.சுப்ரமணியன் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப்பேசினார். சத்துணவு ஊழி யர் சங்க மாவட்டத்தலைவர் பொன்.ஆனந்தராசு, மாவட்டச் செயலாளர் கொளஞ்சி, தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை பேசினர். சாலைப் பணியாளர்கங்க மாவட்டப்பொருளாளர் கரு ணாநிதி நன்றிதெரிவித்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

× RELATED நேர்மையான வேட்பாளர்களுக்கு...