×

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் பிப்.28 கடைசி நாள்

மதுரை, ஜன.23: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்திட்டம் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்படி பொதுப்பிரிவு பதிவுதாரர்கள் கல்வித்தகுதியை பதிவு செய்து, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற, பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் (எஸ்எஸ்எல்சி பெயில்), பள்ளியிறுதி வகுப்பு, மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டதாரி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.இந்த உதவித்தொகை பெற குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுபவர், தமிழகத்திலேயே பள்ளி, கல்லூரி கல்வியை முடித்தவராக இருக்க வேண்டும். ஊதியம் பெறும் எவ்வித பணியிலோ, சுய வேலைவாய்ப்பிலோ இருக்கக்கூடாது. அரசு மற்றும் பிற முகமைகளின் வாயிலாக எந்த நிதியுதவியையும் பெறுபவராக இருக்கக்கூடாது. அன்றாடம் பள்ளி, கல்லூரிக்கு சென்று பயில்பவராக இருக்கக்கூடாது.தகுதியுடையவர்கள் அலுவலக வேலைநாட்களில் வேலைவாய்ப்பக அடையாள அட்டை, கல்விச்சான்றுகளுடன் (மாற்றுச்சான்று உள்பட) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழிற்கல்வி பதிவுதாரர்களும், ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்களும் வர தேவையில்லை.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் பிப்.28ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம். மேலும் ஏற்கனவே வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை பெற்று வருபவர்கள், உதவித்தொகை பெற்று ஓராண்டு முடிவுற்றிருப்பின் தொடர்ந்து உதவித்தொகை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுய உறுதிமொழி ஆவணம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.மேற்கண்ட தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

ஏமாற்றம் கொடுத்த முந்தைய மாநாடுகள்
2015ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி தொழில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் மதுரையில் உள்ள இரு ஐடி பூங்காக்களுக்கும் எதிர்பார்க்கப்பட்ட முதலீடுகள் வரவில்லை. இன்று தொடங்கும் மாநாட்டின் மூலமாவது முதலீடுகள் வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது,

Tags : Employment Office ,
× RELATED தேனியில் இன்று தனியார் துறை...