×

ஜாக்டோ ஜியோ போராட்டம் மாவட்டத்தில் 6,300 பேர் பங்கேற்பு இன்று மறியல் போராட்டம்

மதுரை, ஜன.23: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஜாக்டோ ஜியோ நேற்று முதல் துவக்கியது.கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், நீதிராஜா, சுப்பையன், சதீஷ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் முருகையன் உள்ளிட்டோர் பேசினர். இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.மேலூர்: மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோலைராஜா தலைமை வகித்தார். நாகராஜன், சிவகுமார், கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜேசுதாஸ், சாலமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தமிழக ஆசிரியர் கூட்டணி வேல்முருகன் நன்றி கூறினார்.உசிலம்பட்டி: உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பட்டதாரிகள் சங்க மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். அரசு ஊழியர்கள் சங்க வட்ட கிளைத்தலைவர் சின்னப்பொண்ணு, தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்ட செயலாளர் பொற்செல்வம், ஜாக்டோஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர் முருகன் கலந்து கொண்டனர்.திருமங்கலம்: திருமங்கலத்தில் நடந்த போராட்டத்தில் 35 சதவீதம் பேர் கலந்து கொண்டனர். திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்டத்தில் மொத்தம் 6,218 பேர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2வது நாளாக தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

Tags : participants ,Geo Battaramai District ,
× RELATED வயது முதிர்ந்தவர்கள்,...