×

கள்ளச்சாராய விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், ஜன. 22:  திருப்பூரில் போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார். திருப்பூர், தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளி முன்பு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில், போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாரயத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை கலெக்டர் பழனிசாமி துவங்கி வைத்தார். இந்த பேரணி தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பல்லடம் சாலை எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியினை சென்றடைந்தது.

இதில், திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரி, திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி, மற்றும் அரசு மருத்துவமனை செவிலியர் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன், எஸ்.பி., கயல்விழி, துணை கமிஷனர் உமா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Smiley ,
× RELATED பொட்டேடோ ஸ்மைலி