×

தேயிலை தோட்டத்தில் திரியும் ஒற்றையானையால் ெதாழிலாளர்கள் பீதி

மூணாறு, ஜன.22: மூணாறு அருகே தேயிலை தோட்டங்களில்  ஒற்றையானை நடமாடுவதால் தோட்டத்தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மூணாறு அருகே அமைந்துள்ள நயமக்காடு எஸ்டேட் பகுதி உள்ளது. இப்பகுதியில் கடந்த 3 நாட்களாக ஒற்றையானை, தேயிலை தோட்டகளுக்குள் உலா வருகிறது. இது சுற்றுலாப்பயணிகளுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தாலும், தோட்டத்தொழிலாளர்களுக்கு பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
காலை நேரங்களில் தேயிலை தோட்டங்களில் யானை நடந்து வருவதால் தேயிலை எடுக்கும் தொழிலாளர்கள் அச்சத்துடன் வேலை செய்யும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் முக்கிய சாலைகளில் யானை நடமாடுவதல், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில்,`` ஒவ்வெரு நாளும் உயிருக்கு பயந்து அச்சத்துடன் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே,  யானைகள் தேயிலை தோட்டங்களில் நடமாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இந்நிலையில்  நடையார் குருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் யானைகள் நேற்று புகுந்தது. இதனால், தேயிலை எடுக்க வந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். அப்போது கீழே விழுந்ததில் பலருக்கு சிறுகாயம் ஏற்பட்டு எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : tea garden ,
× RELATED பந்தலூர் அருகே பிடிக்கப்பட்ட சிறுத்தை வண்டலூர் கொண்டு செல்லப்பட்டது