×

பெரம்பலூரில் அரசு பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

பெரம்பலூர், ஜன. 22: பெரம்பலூரில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி நடந்தது. இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த 76 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பாகக் கற்றலில் குறைபாடுடைய மாணவ, மாணவியருக்கு எளிமையாகப் பயிற்சியளிப்பது குறித்த சிறப்பு பயிற்சி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. பெரம்பலூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப் பாளர் நல்லுசாமி தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் வாழ்த்துரையாற்றினார். இந்த பயிற்சியில் கருத்தாளர்கள் திலீப், விஜயகுமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 76 ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Tags : graduate teachers ,Perambalur ,Government School ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி