சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்துக்கு சிபிஐ ஆதரவு

புதுச்சேரி, ஜன. 22: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை:
 புதுச்சேரி மாநிலத்தில் அரசு கல்லூரிகளுக்கு மட்டும் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் நிறைவேற்றப்படும். சொசைட்டி கல்லூரிகளுக்கு நிறைவேற்றப்படாது என்று புதுவை அரசு முடிவு எடுத்திருப்பது பாரபட்சமான செயலாகும். இதனால் 19 சொசைட்டி கல்லூரிகளில் பணிபுரியும் 4 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கடந்த 18ம் தேதியில் இருந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு ஆதரவு கலந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது. இப்பிரச்னையில் புதுவை அரசு தலையிட்டு போராட்டக்குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

× RELATED பரிவோடு கேட்டதோடு புதுச்சேரி...