×

சோளப்பயிருக்கு காப்பீடு விண்ணப்பிக்க அழைப்பு

பள்ளிபாளையம், ஜன.11: பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளிபாளையம் வட்டாரத்தில், நடப்பாண்டு ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சோளம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில்  சோளப்பயிருக்கு பிரதமரின் காப்பீடு திட்டத்தின்படி, பயிர் காப்பீடு  செய்து கொள்ள அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பள்ளிபாளையம்  வட்டராத்தில் சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ₹197  செலுத்தி, வறட்சி மற்றும் இயற்கை பாதிப்பு ஏற்பட்டால் ₹13,400 இழப்பீடு பெறமுடியும். போதிய ஆவணங்களுடன் வரும் 15ம் தேதிக்குள் தேசிய அல்லது  தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும்.  அதேபோல்,  வட்டாரத்தில் எள், நிலக்கடலை, பச்சைபயறு, துவரை, உளுந்து, மக்காச்சோளம்  பயிரிட்டுள்ள விவசாயிகளும், 15ம் தேதிக்குள்  பிரீமியம் தொகை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி