×

கம்பைநல்லூர் பகுதியில்தண்ணீர் இல்லாமல் காய்ந்த பீர்க்கங்காய்

அரூர், ஜன.11: கடத்தூர் பகுதியில் பருமழையை எதிர்நோக்கி சாகுபடி செய்த பீர்க்கங்காய் கொடிகள், தண்ணீர் இன்றி காய்ந்ததால் விவசாயிகள் ேவதனை அடைந்துள்ளனர்.தர்மபுரி பகுதியில் கம்பைநல்லூர், இருமத்தூர், திப்பம்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் காய்கறிகளை அதிகமாக சாகுபடி செய்திருந்தனர். திப்பம்பட்டி கூட்டுரோடு பகுதியில் சாகுபடி செய்த பீர்க்கங்காய் கொடிகள், காய்ந்த நிலையில் உள்ளது. இது குறித்து திப்பம்பட்டி பகுதி விவசாயி கூறுகையில், ‘பருவமழையை நம்பி ₹40 ஆயிரம் செலவு செய்து பீர்க்கங்காய் சாகுபடி செய்தோம். ஆனால், காய்விடும் பருவத்தில் தண்ணீர் இல்லாததால், காய்கள் கொடியிலேயே காய்ந்து விட்டது. போதுமான தண்ணீர் இருந்தால் ஒரு ஏக்கரில் ₹1 லட்சம் வரை லாபம் கிடைத்திருக்கும். தற்போது காய் விட தொடங்கிய நேரத்தில் தண்ணீர் இல்லாததால், கொடியிலேயே காய்கள் காய்ந்துவிட்டது. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது,’ என்றார்.

Tags : area ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி