×

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் விருப்ப ஓய்வு எண்ணிக்கை அதிகரிப்பு

புதுக்கோட்டை,  ஜன.11: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு உடல் நிலை  பிரச்னைகள் மற்றும்  பணி பிரச்னைகள் என பல  பிரச்னைகளின் காரணமாக விருப்ப ஓய்வு பெறும்  போலீசார்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, கீரனுார், இலுப்பூர்,  பொன்னமராவதி, கோட்டைப்பட்டிணம் உள்ளிட்ட 6 சப்டிவிசன்கள் உள்ளன. இந்த  சப்டிவிசன்களில் 40க்கும் மேற்பட்ட சட்டம் ஒழுங்கு மற்றும் மகளிர் காவல்  நிலையங்கள் உள்ளது. இதபோல் குற்றப்பிரிவு, மது விலக்கு பிறவு உள்ளிட்ட  பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இதில் டிஎஸ்பிகள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் தலைமை காவலர்கள், கிரேடு1, கிரேடு2 உள்ளிட்ட பதவிகளில்  போலீசார் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் ஆதயப்படை டிஎஸ்பி,  இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட  போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மேல் மதுவிலக்கு பிரிவு  ஏடிஎஸ்பி, ஏடிஎஸ்பி நிர்வாகம், எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் பணியாற்றி  வருகின்றனர். இதேபோல் கியூ பிரிவு, உளவுத்துறை சிபிசிஐடி, தொழில்நுட்பம்  உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
 இந்த  பிரிவுகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில்  பல்வேறு பிரச்னைகளினால் போலீசார் விருப்ப ஓய்வு பெற்று செல்கின்றனர்.  குறிப்பாக கடந்த 2017-18ம் ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்டோரும்,  2018-19ம் ஆண்டுகளில் 69 பேரும் விருப்பு ஓய்வு பெற்று சென்றுள்ளனர். இந்த  விருப்ப ஓய்வு பெறும் போலீசார்களின் எண்ணிக்கை வரும் 2019-2020ம் ஆண்டுகளில்  மேலும் அதிகரிக்கும் என்று போலீஸ் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. போலீஸ் அதிகாரிகள் விருப்பு ஓய்வு என்பது அதிக  அளவில் நடப்பதில்லை. குறிப்பாக சிறப்பு எஸ்ஐக்கள், தலைமை  காவலர்கள், எழுத்தர்கள் மற்றும் காவலர்கள் என போலீஸ் துறையின் கீழ்  நிலையில் உள்ளவர்கள்தான் அதிக அளவில் விருப்ப ஓய்வு பெற்று செல்வது  குறிப்பிடத்தக்கது. குடும்ப சூழ்நிலை, மன உளைச்சல் மற்றும் இயத நோய்  உள்ளிட்ட உடல் பிரச்னைகளால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். இதுகுறித்து  போலீஸ் வட்டாரங்களிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த விருப்ப ஓய்வு  அதிகரித்து வருகிறது. அதுவும் கடந்த 2 ஆண்டுகளின் விருப்பு ஓய்வு  பெறும் போலீசார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய  காரணம் கடும் மன உளைச்சலில் பணியாற்றும் போலீசார்  வயது ஆக ஆக இயத நோய்  ஏற்படுகிறது.
 மன அழுத்தம் ஏற்பட்டு பல உடல் பிரச்னைகள் வருகிறது.  இதனால் தொடர்ந்து பணியாற்றினால் மேலும் பிரச்னை அதிகரிக்கும் என்று  மருத்துவர்களின் ஆலோசனைப்படி விருப்ப ஓய்வு பெற்று செல்கின்றனர். இதுமட்டும்  காரணமில்லை. மேலும் பல பிரச்னைகள் உள்ளது. குறிப்பாக எஸ்ஐக்களுக்கு கீழ் பனியாற்றும் சிறப்பு எஸ்ஐக்கள், ஏட்டுக்கள் உள்ளிட போலீசார்களுக்கு அரசு சார்பில் பணியில் இருக்கும்போது  வாகனங்கள் இருப்பதில்லை. மாவட்டத்தின் பல ஸ்டேஷன்களில் போலீசார்  பற்றாக்குறை அதிகரித்துள்ளது. சில நேரங்களில் ஒரு போலீசார் பல பணிகளை  பார்க்கின்றனர். இதனால் கடும் அலைச்சல், மன உளைச்சலில் சிக்கி  தவிக்கின்றனர். சிறுவயதில் இருக்கும்போது இந்த பிரச்னையை  சமாளித்துவிடுகின்றனர். வயதாக வயதாக உடல் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.  மேலும்   குறிப்பாக இரவு ரோந்து போகும்போது அவர்களின் சொந்த வாகனத்தில் செல்கின்றனர். ஒரு ஸ்டேஷன் அளவு மட்டுமிலாமல் வட்டரா அளவிலும் ரோந்து பணிக்கு  செல்கின்றனர். இரவில் ரோந்து பணிக்கு செல்லும்போது ஒரு ஸ்டார்ச் லைட் கூட  வழங்குவதில்லை. குறிப்பாக வயதான போலீசார் இரவு ரோந்து பணியில் செல்லும்போது  குளிர் நாட்களில் ஸ்வெட்டர், குல்லா உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு ஆடைகளும்  வழங்குவதில்லை.
இதை அனைத்தும் போலீசார் சொந்த செலவில் ஏற்பாடு  செய்துகொள்கின்றனர். இதனால் வீன் செலவுதான் ஆகிறது. அதோடு மட்டுமில்லாமல்  பல உடல் உபாதைகளுக்கு உட்பட்ட வேறு வழியின்றி குடும்பத்தினரிடம் ஆலோசனை  செய்து விருப்ப ஓய்வு பெற்று செல்கின்றனர். இதே நிலை நீடித்தால் பல  காவலர்கள் விருப்ப ஓய்வு பெற தயாராகி வருகின்றனர் என்றனர்.

Tags : retirees ,Pudukottai District Police ,
× RELATED சென்னை மாநகர காவல் துறையில்...