×

7வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த கோரி 18ம் தேதி முதல் பணி புறக்கணிப்பு

புதுச்சேரி, ஜன. 11: புதுவை மாநிலத்தில் உள்ள சொசைட்டி கல்லூரிகளின் மூலமாக புதுச்சேரியை சேர்ந்த 80 சதவீதத்துக்கும் மேலான மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இந்த உயர்க்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த உயர்க்கல்வி நிறுவனங்கள் தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
ஆனால், இங்கு பணிபுரிய கூடிய ஆசிரியர்களுக்கும்,  ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கும் புதுச்சேரி அரசு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படியிலான
ஊதியத்தை கடந்த இரண்டரை ஆண்டுகளாக அமல்படுத்தாமல் காலம் கடத்தி வருகிறது.‘இக்கோரிக்கை சம்பந்தமாக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புதுவை அரசு 7வது ஊழியக்குழுவின் சம்பளத்தை சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு அமல்படுத்தும் வரை வருகிற 18ம் தேதி முதல் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூட்டு
நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags : Commissioner ,Pay Commission ,
× RELATED “188 இடங்களில் தண்ணீர் பந்தல்...