புகையிலை பொருட்கள் விற்றவர் உட்பட 2 பேர் கைது

ஆற்காடு, ஜன.11: ஆற்காடு டவுன் எஸ்ஐ சிதம்பரம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கீழ்விஷாரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள குளத்துமேடு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை செய்தபோது புகையிலை பொருட்களை விற்ற கீழ்விஷாரம் வேதமுனி தெருவை சேர்ந்த சுகுமார்(29) என்பவரை கைது செய்து 60 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், எஸ்ஐ சிதம்பரம் மற்றும் போலீசார் நேற்று செய்யாறு பைபாஸ் சாலையில ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த ஆற்காடு காதர்ஜண்டா தெருவை சேர்ந்த கரீம்(38) என்பவரிடம் விசாரித்தபோது அவ்வழியாக செல்லும் அரசு பஸ் மீது கல்வீசி தாக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து கரீமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED புது கும்மிடிப்பூண்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்