×

பெரம்பலூர் அருகே சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்திற்கு வெளிமாவட்ட கலெக்டரால் தடை

பெரம்பலூர்,டிச.12: பெரம்பலூர்அருகே சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்திற்கு வெளிமாவட்ட கலெக்டர் ஒருவர் தடையாகவுள்ளதால் தமிழக அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சின்னமுட்லு பகுதியை பார்வையிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சண்முகம் கூறினார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, மலையாளப்பட்டி அடுத்த பச்சைமலை அடிவாரத்தில் சின்னமுட்லு பகுதியில் நீர்த்தேக்கம் அமையவுள்ள இடத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மாநில பொதுச்செயலாளர் சண்முகம் மற் றும் மாநிலச் செயலாளர் சாமிநடராஜன் ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளுடன் கோகுலகிருஷ்ணன் பிரபு ஆகியோருடன் சென்று பார்வையிட்டனர். பின்னர் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டம், மேட்டூர் அணைக்கட்டைப் போல மிகப்பெரிய நீர்த்தேக்க திட்டமாக அமைந்தால் பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதியைப் பெறும். 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர்வசதி உள்பட நிலத்தடி நீர்மட்டம் உயரும். அணைக்கட்டு அமைவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு மத்தியஅரசு நிலம் கையகப்படுத்தும் சட்டவிதிகளுக்கு உட்பட்டு மாவட்ட நிர்வாகம் உரிய நஷ்டஈட்டைப் பெற்றுத்தர வேண்டும். இந்த நிலம்தவிர வேறு நிலம் இல்லாதவர்களுக்கு மாற்றுநிலம் வழங்கவும் மாவ ட்ட நிர்வாகம் கூடுதல் அக்கரை காட்டவேண்டும்.

லட்சக் கணக்கான பொதுமக்களு க்கு, விவசாயிகளுக்கு நன்மைதரக்கூடிய இத்திட்டத்திற்கு தமிழகஅரசின் உயர் பதவியிலுள்ள ஒரு வெளிமாவட்டத்தின் கலெக்டரே அப்பகுதியில் நிலங்களை வாங்கி வைத்துக்கொண்டு தடையாகவுள்ளார் என்பதால் தமிழகஅரசு இந்தவிஷயத்தில் தலையிட்டு சின்னமுட்லு அணைக்கட்டுத்திட்டம் விரைந்துநிறைவேற நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மானாவாரி நிலங்க ளெல்லாம் பாசனவசதிபெற்று டெல்டா மாவட்டங்களைப் போல பசுமையாகக் காட்சியளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் விசுவக்குடி நீர்த்தேக்கத்தையும் அதனுடைய பயன்பாடுகளையும் நேரில் பார்வையிட்டார்.

அப்போது, பெரம்பலூர் மாவட்டத்தில், நீர்த்தேக்கத்துடன் கூடிய எவ்வித சுற்றுலாத்தலங்களும் இல்லாததால் விசுவக்குடி நீர்த்தேக்கத்தையொட்டி பெரம்ப லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, ரூ.2கோடி மதிப்பிலான பூங்கா அமையப்பெற்று மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அதோடு இங்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்குத் தேவையான சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்பட அடிப்படை வசதிகளைச் செய்துதர பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Tags : Perambalur ,Collector ,outskirts ,Chinnamudula Reservoir ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...