×

தேன்கனிக்கோட்டையில் பைப் லைனில் உடைப்பால் சாலையில் தேங்கும் குடிநீர்

தேன்கனிக்கோட்டை, டிச.11: தேன்கனிக்கோட்டையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து மாதக்கணக்கில் பைபாஸ் சாலையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், விபத்து அபாயம் அதிகரித்து வாகன ஓட்டிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் பைப்லைன் பதித்துள்ளனர். இந்நிலையில், பைபாஸ் சாலையோரம் போடப்பட்டுள்ள குழாயில் பழுது ஏற்பட்டு, கடந்த சில நாட்களாக காவிரி குடிநீர் ரோட்டில் தேங்கி, பல்வேறு இடங்களில் அரிப்பு ஏற்பட்டு சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சிதிலமடைந்த சாலையில் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஊருக்குள் காவிரி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சாலையில் தண்ணீர் வீணாகி வருவது வேதனை அளிக்கிறது. சாலையில் தொடந்து தண்ணீர் தேங்கியதால், ஆங்காங்கே சுமார் ஒரு அடி ஆழத்திற்கு குழிகள் ஏற்பட்டுள்ளது. இது தெரியாமல் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும், யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால், உயிர்பலி ஏற்படும் முன்பு குடிநீர் குழாயை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்,’ என்றனர்.


Tags : road ,break ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி