×

மஞ்சள் விளைச்சல் அமோகம்

கடத்தூர், டிச.11: பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனை செய்ய கடத்தூர் பகுதியில்  மஞ்சள் கொத்து அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
 தர்மபுரி மாவட்டம் கடத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கலுக்கு தேவையான கரும்பு விளைச்சல் அதிகளவில் உள்ளது. பிற மாநில, மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையன்று மஞ்சள் கொத்து அதிகளவில் பயன்படுத்துவர். ெபாங்கல் பானையில் கட்டுவதற்காக மக்கள் அதிகளவில் வாங்கி செல்வர். ஒடசல்பட்டி, கடத்தூர், சில்லாரஅள்ளி, நத்தமேடு, ராமியணஅள்ளி, சாலூர், தென்கரைக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் மஞ்சள் நன்கு விளைந்துள்ளது. அறுவடை செய்ய விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர்.

 விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் மஞ்சள் செடி வரை நடவு செய்ய முடியும். ஆறு மாத பராமரிப்பிற்கு பின், நன்கு விளைந்த மஞ்சள் கொத்துகளை செடிகளுடன் பறித்து, வியாபாரிகள் மூலம் பொங்கல் பண்டிகை விற்பனைக்கு அனுப்புவோம். ஒரு மஞ்சள் கொத்திற்கு ₹20 வீதம் கிடைத்தால் மட்டுமே லாபம் உண்டு. இல்லாவிட்டால் விவசாயிகளுக்கு இழப்பு தான் மிஞ்சும். காய்கறி, கரும்பு, கீரை வகைகளை நடவு செய்யும்போது, துணை பயிராக மஞ்சள் கொத்தும் பயிரிடுகிறோம். இது சில்லரை செலவுக்கான வருமானமாக இருக்கும், என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா