×

கம்பைநல்லூரில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

அரூர், டிச.11: தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி மொரப்பூர் ஒன்றியம் மற்றும் கம்பைநல்லூர் பேரூர் கழகம்  சார்பில், கம்பைநல்லூரில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்ரமணி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் பார்.இளங்கோவன், தமிழ்மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் கேஸ் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் செங்கண்ணன், பேரூர் செயலாளர் வடமலை முருகன், ஒன்றிய துணை செயலாளர் ஜெமினி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெகநாதன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சிவகாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சரவணன், வாசுதேவன், இக்பால், சின்னசாமி, மகாலிங்கம், வெங்கடேசன், சின்னத்தம்பிசாமி, சசிகுமார், செல்வம், நடேசன், கோவிந்தசாமி, வேடியப்பன், நாகராஜ், ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : activists ,DMK ,Coimbatore ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...