×

கொத்தமல்லி விளைச்சல் அமோகம்

அரூர், டிச.11: அரூர் சுற்றுவட்டார பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லி தழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 3 மாத கால பயிரான கொத்துமல்லி இலையாகவும், அதன் விதை பொடியாக்கி உணவிலும் சேர்க்கப்படுகிறது.  ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை பகுதியிலிருந்து கொத்தமல்லி வாங்கி வந்து பெரிய அளவிலான கட்டு 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொத்தமல்லி அதிகமாக விதையாகவே அறுவடை செய்யப்படுகிறது. தற்போது, கொத்தமல்லி செடியில் பூக்கள் பூத்து வயல் முழுவதும் வெள்ளை கம்பளம் விரித்ததுபோல் காணப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் விதையாக முற்றி அறுவடை காலம் துவங்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா