×

சொத்துவரி உயர்வை திரும்பப்பெறக்கோரி தென்காசியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி, டிச. 11:  சொத்துவரியை திரும்பப்பெறக் கோரி தென்காசியில் நகர திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தென்காசி  நகராட்சி காட்டுபாவா பள்ளியில் இருந்து வாய்க்கால்பாலம் வரையிலான குண்டும்  குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். உயர்த்தப்பட்ட சொத்துவரியை  திரும்ப பெற வேண்டும். தென்காசி பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தை  மத்தளம்பாறை ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யவிருப்பதை தடுத்து நிறுத்த  வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மவுண்ட்ரோட்டில்  நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வக்கீல்  சிந்தாமணி ராஜா தலைமை வகித்தார். சிறுபான்மை பிரிவு முகமது  இஸ்மாயில், நகர நிர்வாகிகள் சொக்கலிங்கம், நடராஜன், பால்ராஜ், கலைபால்துரை,  ஷேக்பரீத், பாலா, அப்துல்கனி முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் சாதிர்  வரவேற்றர்.

 மேற்கு மாவட்டச் செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்துப் பேசினார். மாவட்ட அமைப்பாளர்கள் கோமதிநாயகம்,  வெல்காம்ராஜ் வளன்அரசு, இசக்கிபாண்டியன், சேக்முகமது, துணை அமைப்பாளர்கள்  சாமித்துரை, அழகுசுந்தரம், கிட்டுபாண்டியன், வக்கீல் செந்தூர்பாண்டியன்,  யோவான், ரகுமான்கான், முத்துக்கிருஷ்ணன், வார்டு நிர்வாகிகள்   மைதீன்பிச்சை, முகமது அலி, சித்தார்த்தன், செல்லத்துரை, மோகன்ராஜ்,  மகாலிங்கம், ராம்ராஜ், வடகரைராமர், காஜா, ராம்துரை, வெங்கடேசன், அன்வர்அலி,  நாகூர்மீரான், ஜாகிர்உசேன், இசக்கித்துரை, ஐயப்பன், ரெசவுமைதீன், செய்யது  சுலைமான், கோபால்ராம், கிட்டு, செய்யது அலி, சண்முகநாதன், மணிமாறன்,  முருகானந்தம், நாகப்பன், கமால், பாலு, கபிலன், சிவா, மனோஜ், சாமி,  ஜபருல்லாகான், வேலுச்சாமி, அருணாசலம், வெங்கடாசலம், ராமையாபாண்டியன்  மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : DMK ,protest demonstration ,Tenkasi ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...