×

ஒகேனக்கல்-திருப்பத்தூர் சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் ₹43 கோடியில் அமைக்கப்படுகிறது

தர்மபுரி, டிச.7: தர்மபுரி மாவட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குமாரசாமிபேட்டை, கடகத்தூர் ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதே போல், அதியமான்கோட்டையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ஒகேனக்கல்லில் இருந்து தர்மபுரி வழியாக சென்னை செல்லும் பயணிகளுக்கு வசதியாக, ஒகேனக்கல்- திருப்பத்தூர் இருவழி சாலை ₹43 கோடி மதிப்பீட்டில் 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தர்மபுரி குமாரசாமி பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து, ஆட்டுக்காரம்பட்டி வரையில் நான்கு வழி பாதையாக மாற்ற, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இதன்படி குமாரசாமிபேட்டையில் இருந்து ஆட்டுக்காரம்பட்டி வரை, 5 கிலோ மீட்டர் தூரம் ₹18 கோடி மதிப்பில் அகலப்படுத்தப்பட உள்ளது. இதே போல், டேக்கீஸ்பேட்டை- பால்டிப்போ சந்திப்பில் இருந்து நாய்க்கன்கொட்டாய் வரையிலான 7 கிலோ மீட்டர் சாலை, ₹25 கோடி மதிப்பில் நான்கு வழி சாலையாக அமைக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, இரு இடங்களிலும் நெடுஞ்சாலைத்துறையினர்  ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல், அரூர் பைபாஸ் சாலை 4 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்ய ₹7 கோடியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : road ,Hogenakkal-Tirupattur ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி