×

ஒரே இடத்தில் தாம்பரம், சேலையூர் ஆபிஸ் செம்பாக்கத்தில் சார்பதிவாளர் அலுவலகம்

தாம்பரம்: ஒரே இடத்தில் தாம்பரம், சேலையூர் சார்பதிவாளர் அலுவலகத்தை ஒருங்கிணைத்து செம்பாக்கம் மகாலட்சுமி நகரில் 1 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படுகிறது. கிழக்கு தாம்பரம், எம்.இ.எஸ். சாலையில் தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகமும், கிழக்கு தாம்பரம், பாரதமாதா சாலையில் சேலையூர் சார்பதிவாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை சேலையூர் முதல் மேடவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல, தாம்பரம் முதல் கடப்பேரி மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் சம்பந்தமான பணிகளுக்காக கிழக்கு தாம்பரம், எம்.இ.எஸ் சாலையில் உள்ள தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகம் சென்று வருகின்றனர். இந்த இரண்டு அலுவலகங்களுக்கும் சொந்தமாக கட்டிடம் இல்லாததால் வாடகைக்கு செயல்பட்டு வருகிறது.

இந்த இரண்டு அலுவலகங்களுக்கும் சொந்த கட்டிடம் கட்டுவதற்கு கடந்த 2013ம் ஆண்டு அரசு ஆணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது தாம்பரம் மற்றும் சேலையூர் சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு 1 கோடியே 8 லட்சம் ஒதுக்கப்பட்டு செம்பாக்கம், மகாலட்சுமி நகர் பகுதியில் கீழ்தளத்தில் வாகனங்கள் நிறுத்தவும், முதல் தளத்தில் சேலையூர் சார்பதிவாளர் அலுவலகம், இரண்டாவது தளத்தில் தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகம், மூன்றாவது தளத்தில் ஆவணங்கள் வைப்பதற்கும் என லிப்ட் வசதியுடன் கூடிய புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். உடன் காஞ்சி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்.பியுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஸ்ரீபெரும்பத்தூர் எம்.பி கே.என்.ராமசந்திரன், பல்லாவரம் முன்னாள் எம்.எல்.ஏ தன்சிங், செம்பாக்கம் முன்னாள் தலைவர் சாந்தகுமார் உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Tambaram ,Resident Officer ,Salalur Office ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!