×

ஆயுளை நீடிக்கச் செய்யும் நெல்லி

நன்றி குங்குமம் தோழி

நெல்லிக்காயை சமைக்க  பயன்படுத்துவதில்லை. ஊறுகாய், வற்றல் போன்று தயார் செய்து உட் கொண்டு வந்தால் பல நன்மைகளைப் பெறலாம். ெபரிய அளவுள்ள நெல்லிக்காயில் கால்சியம், கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு பொருட்கள், தாதுப் பொருட்கள் போன்றவை அடங்கியதாகும். வற்றலாகப் போட்டு உபயோகிக்கும் போது கூட உயிர்சத்தான ‘விட்டமின் சி’ பத்திரமாக அழிந்து விடாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுளை நீடிக்கக்கூடிய சக்தி நெல்லிக் காய்க்கு இருக்கிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் தான் ஆயுர்வேத மருத்துவ முறையில் பல்வேறு லேகியங்கள், காரிஷ்டங்கள் தயாரிக்கின்றனர் மருத்துவர்கள்.

*இக்காயினை ஊறுகாயாகவோ, பிழிந்து சாறு எடுத்தோ, லேகியமாக கிளறியோ, அதனுடன் தேன் சேர்த்து சிறுவர்களுக்கு கொடுத்துவர உடல் வலிமை கூடும்.
ஊறுகாயை தினசரி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

*பித்த சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி தொடர்ந்து நெல்லிக்காய் சேர்த்துக் கொண்டால் வியாதி குணமாகும்.

*காயை நசுக்கி, சாறு பிழிந்து சர்பத்தாக தயாரித்து, குடித்து வந்தால் வாயுத் தொல்லை, உடல் அசதி மறையும்.

*நெல்லிக்காய் சாறையும், தேனையும் சம அளவு கலந்து சாப்பிட்டால் மூச்சுத் திணறல் குணமாகும்.

*நெல்லிக்காயை பச்சையாக தின்று வர பல் ஈறுகள் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

*காயை சாறு எடுத்து, எண்ணெயுடன் சம அளவு கலந்து நன்கு காய்ச்சி, தலைக்குத் தடவி, குளித்து வர மயிர்க்கால்கள் உறுதிப்பட்டு, முடி உதிர்வது தடைபடும். மேலும் முடி ஆரோக்கியம் பெற்று, நன்கு வளரும்.

தொகுப்பு : எஸ்.பாரதி, மதுரை.

Tags : Nellie ,
× RELATED பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கும் பாஜ: -எஸ்டிபிஐ தலைவர்