×

பிஎஸ்என்எல் அறிவிப்பு முன்னதாக பில் கட்டினால் கட்டணத்தில் தள்ளுபடி

காரைக்குடி, நவ. 8: பிஎஸ்என்எல் பொதுமேலாளர் ராஜம் தெரிவித்தார்.
பிஎஸ்என்எல் தனலட்சுமி திட்டத்தின் படி ஆயுதபூஜை மற்றும் தீபாவளிக்கு என பண்டிகைகால சலுகையாக தொலைபேசி, மொபைல் மற்றும் இதர சேவைகளுக்கான பில்களை கடைசி தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு சேவைவரி நீங்கலாக உள்ள தொகையில் தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது. இச் சலுகை வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பில்லில் உள்ள தொகை முழுமையாக செலுத்தப்பட வேண்டும்.
வரும் மாதங்களுக்கான தொகையை முன்னதாக செலுத்துபவர்கள், பில் தொகைக்கு மேல் எந்த தொகையையும் செலுத்தலாம். அவ்வாறு செலுத்துபவர்களுக்கு அடுத்த மாத பில் தொகையில், இந்தமாத பில் தொகைக்கும் அடுத்த மாத பில்லுக்கு முன்னதாக செலுத்திய தொகைக்கும் ஒரு சதவீத தள்ளுபடி கணக்கிட்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags : BSNL Announcement ,
× RELATED தீபாவளி அன்று வாடிக்கையாளர் சேவை மையம் இயங்கும் : பி.எஸ்.என்.எல் அறிவிப்பு