×

கொத்தமல்லி தழை வரத்து சரிவு

ஓசூர்,அக்.17: ஓசூர் சுற்றுவட்டார பகுதியில் கொத்தமல்லி தழை வரத்து சரிவால் அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொத்தமல்லி தழை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுகிய கால பயிரான கொத்தமல்லி பயிரிட்ட 40 நாட்களில் தளதளவென வளர்ந்து அறுவடைக்கு தயாராகிவிடும். அதனால் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக அதன் விலை சரிவடைந்தே காணப்பட்டது. ஒருக்கட்டு கொத்தமல்லி 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையில் விற்பனையானது. அண்மையில் ெபய்த மழையால் 50 சதவீத கொத்தமல்லி தழை  விவசாய நிலங்களிலேயே நீரில் அழுகிவிட்டது. இதனால் சந்தைகளுக்கு விற்பனைக்கு எடுத்து வருவது குறைந்துள்ளது.

வரத்து குறைவால் கொத்தமல்லி தழை கட்டு 25 ரூபாய் முதல் 30 ரூபாய்  வரை விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் லாபமடைந்து வருகின்றார். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அதிகம் அனுப்பி வைக்கப்படுகிறது. விசேஷ காலம் வருவதால் கொத்தமல்லி தேவை அதிகரித்துள்ளதால் விலையும் உயர்ந்து வருகிறது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : collapse ,
× RELATED தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த...