×

பெரம்பலூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை

பெரம்பலூர்,அக்.16: பெரம்பலூர் மாவட்டத்திற்கு 800 டன் யூரியா வந்தது. உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) கலைவாணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு மக்காச்சோள பயிரானது 55,962 ஹெக்டர் பரப்பளவிலும், பருத்தி பயிர் 13,266 ஹெக்டர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டுள்ளது.  தற்போது மக்காசோள பயிரானது 30 முதல் 40 நாள் பயிராக உள்ளது. இதுதான் மக்காசோள பயிருக்கு மேலூரம் இடுவதற்கு ஏற்ற நிலையாகும். பெரம்பலூர் மாவட்டத்தில் பயிர்களுக்கு தேவையான உரங்களை தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னையை சேர்ந்த மெட்ராஸ் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்திலிருந்து 1,230 டன் யூரியா உரமானது ரயில்மூலம் திருச்சிக்கு  வந்தது. இதில் 800டன் யூரியாஉரம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உரமானது லாரிகள் மூலம் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தனியார் உரக்கடைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படை யில் சமச்சீர் அளவில் தேவையான அளவு யூரியா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தழைச்சத்து அதிகமுள்ள யூரியாவை அதிகமாக உபயோகிப்பதால் பூச்சி மற்றும் நோய்கள் அதிகமாகத்தாக்கும். எனவே விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக யூரியாயிட வேண்டாம். உரங்களை அரசு நிர்ணயித்த விலைக்கு உரிய  ரசீது மூலம் விநியோகம் செய்திட தனியார் உர வியாபரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 45 கிலோ எடை கொண்ட 1 மூட்டை யூரியாவின் அதிகப்பட்ச சில்லரை விற்பனை விலை ரூ266.50 ஆகும். வியாபாரிகள் இந்த விலைக்குதான் விற்பனை செய்யவேண்டும். மீறுபவர்கள் மீது உரக்கட்டுப்பாடு சட்டம் 1985 மூலம் கடும்நடவடிக்கை எடுக்கப்படும். உர விற்பனை தொடர்பாக புகார்களுக்கு அந்தந்தப்பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : district ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி