×

ஜெயங்கொண்டத்தில் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் ஒத்திகை நிகழ்ச்சி

ஜெயங்கொண்டம்,அக்.16: ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் தீயணைப்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சி செய்து காண்பித்தனர்.  உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு இயற்கை சீற்றங்களால் ஏற்படும் புயல், மழை, வெள்ளம், தீ, நிலநடுக்கம் போன்றவற்றிலிருந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்திருக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு தங்களை காத்துகொள்ள வேண்டும் என்பது பற்றி செயல்விளக்கத்தின் மூலம் ஒத்திகை செய்து காண்பித்தனர். தீவிபத்து ஏற்பட்ட வீடுகளிலிருந்து உறவினர்களை காப்பாற்றவது, மழையினால் ஏற்படும் வெள்ளத்திலிருந்து தங்களை காத்து கொள்வது, தண்ணீரில் மிதந்து தங்களை காத்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு வகையான மீட்புபணிகள் குறித்து செயல்விளக்கத்தின் மூலம் செய்து காண்பித்தனர்.

இவர்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் வெள்ளம் சூழும்போது பொதுமக்களை எவ்வாறு மேடான பகுதிக்கு அழைத்து செல்வது, அவர்களுக்கான உணவு, குடிநீர், போன்றவை வழங்குவது மற்றும் பொதுமக்கள் மழை வெள்ளத்தின்போது எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டிய பேட்டரி, ரேடியோ, டார்ச்லைட், கழி(கம்பு), உள்ளிட்டவற்றை அவசியம் வைத்திருக்க வேண்டும் என விழிப்புணர்வுகளை கூறினார்.

Tags : Jayankondam ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் வீராக்கன்...