×

உரிமமின்றி பட்டாசு கடை அமைத்தால் நடவடிக்கை

பழநி, அக். 12: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில் பழநி நகரம் களைகட்டத் துவங்கி உள்ளது. துணிக்கடைகள், இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளியில் முக்கிய சாராம்சமாக விளங்குவது பட்டாசு. தற்போதே பட்டாசுக்கடை அமைக்கும் பணியும் சுறுசுறுப்படைந்துள்ளது. பட்டாசு கடை அமைப்போர் பாதுகாப்பு கருதி தீயணைப்புத்துறை, காவல்துறையினரிடம் அனுமதிபெற்று மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு பிறகே கடை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பழநி பகுதியில் உள்ள கிராமங்களில் மளிகைக்கடை மற்றும் பெட்டிக்கடைகளின் முன்பு தற்காலிக பட்டாசு கடைகள் ஏற்படுத்தப்படுவது வழக்கம்.

இது மாதிரியான முன் அனுமதி பெறாத கடைகளில் வெடி விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் இது மாதிரியான கடைகளுக்கும், தள்ளுவண்டிகளில் பட்டாசு விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி விற்பனை நடைபெறுவதை தடுக்க பழநி சரகம் முழுவதும் போலீசார் ரோந்துப்பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரிய உரிமமின்றி பட்டாசுக்கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பழநியில் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags :
× RELATED சாலை விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலி