×

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் பெண்கள் அனுமதியை எதிர்த்து மதுரையில் ஊர்வலம்

மதுரை, அக். 11: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் பெண்கள் வழிபாடுக்கான அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் ஊர்வலம் நடந்தது.
 மதுரை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் ‘சபரியைக் காப்போம்’ ஊர்வலம் மதுரை மேலமாசி-வடக்கு மாசி சந்திப்பு நேரு ஆலால சுந்தர விநாயகர் கோயில் தொடங்கி, மேலமாசிவீதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் முடிவடைந்தது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.
இதேபோல் ஜயப்ப சேவா சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமையில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரியமும், ஐதீகமும் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி புதூர், வடக்குமாசி வீதி உள்ளிட்ட பல்வேறு ஐயப்பன் கோயில்களில் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பேட்டிநிர்வாகிகள் வாக்குவாதம்!  மேடையில் சஞ்சய் தத் ஒவ்வொருவராக நேரில் அழைத்து பேசினார்.  அப்போது திடீரென எழுந்த சில நிர்வாகிகள், “எங்களை ஏன் அழைக்கவில்லை” எனக்கூறி காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே சஞ்சய் தத், மேடையை விட்டு எழுந்து வந்து, அவர்களை சமாதானப்படுத்தினார்.
இதுகுறித்து நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘கடந்த 9 மாதத்திற்கு முன்பு நிர்வாகிகள் தேர்வு நடந்தது. அப்போது மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், துணைத்தலைவர்கள், பொருளாளர், பொதுச்செயலாளர் போன்றோர் டெல்லி மேலிடத்தால் அறிவிக்கப்பட்டனர். வார்டு தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இன்னும் பெயர் அறிவிக்கப்படவில்லை. சஞ்சய் தத், புதிதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளை அழைத்து பேசியதால், மற்றவர்கள் எங்களை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டதால், சிறிது சலசலப்பு ஏற்பட்டது” என்றார்

Tags : Madurai ,women ,
× RELATED மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன்...