×

கட்டண உயர்வை கண்டித்து அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மேலூர், அக். 11:    தேர்வு கட்டணம் உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மேலூர் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   மேலூர் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. அமைப்பின் தலைவர் சேதுபாண்டி போராட்டத்திற்கு தலைமை வகித்தார். செயலாளர் புஷ்பலதா முன்னிலை வகித்தார்.    இதில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கக்கூடாது. உயர்கல்வி ஆணையத்தை அமைக்கக்கூடாது. இலவச பஸ் பயண அட்டை, விலையில்லா லேப்டாப்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை மாணவர்கள் கோஷங்களாக எழுப்பினர்.   மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டது.

Tags : Government arts college students ,tariff hike ,
× RELATED மின்கட்டண உயர்வுக்கான திருத்தத்தை...