×

ஆவலோடு காத்திருக்கும் விவசாயிகள் * மின்சார துறையினர் அலட்சியம் தவறான சிகிச்சையால் மனைவி, குழந்தை இறப்பு

தேனி, ஆக. 14:  தனது கர்ப்பிணி மனைவிக்கு தவறான சிகிச்சையளித்ததால் அவரும், குழந்தையும் இறந்து விட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி கலெக்டரிடம் வாலிபர் பரபரப்பு புகார் செய்துள்ளார். இதுகுறித்து உத்தமபாளையம் பாறைத்தெருவில் குடியிருக்கும் டிரைவர் அர்ஜூன்(35) நேற்று தேனி கலெக்டர் பல்லவி பல்தேவிடம் புகார் மனு அளித்தார். அதில், தனது மனைவி எழிலரசி கர்ப்பிணியானது முதல் உத்தமபாளையம் அரசு மருத்துவமனை, கோம்பை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்தேன். மருத்துவர்கள் அறிவுரைப்படி நடந்து வந்தோம். மனைவியின் கர்ப்ப காலமான ஒன்பதாவது மாதத்தில் அவரது தாய்வீடான திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அழைத்துச் சென்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக எழிலரசி அனுமதிக்கப்பட்டார். பிப். 13ம்தேதி அறுவைச் சிகிச்சை மூலம் பெண்குழந்தை பிறந்தது.

அப்போது மனைவியின் உடல்நிலை மோசமானதையடுத்து, அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு எழிலரசியின் கர்ப்பப்பையை மருத்துவர்கள் அனுமதியின்றி அகற்றியுள்ளனர். மேலும், தனது குழந்தையை பிப். 17ம் தேதி அவசர வார்டில் அனுமதித்ததில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டது. மறுநாள் எழிலரசியும் உயிரிழந்து விட்டாள். கர்ப்ப காலமான 9 மாத காலமும் கோம்பை, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பார்த்தபோது தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால், பிரசவத்திற்கு பின்னர் டாக்டர்கள் முறையான சிகிச்சை அளிக்காததால் தனது மனைவி மற்றும் குழந்தை இறந்து விட்டது. எனவே, தவறான சிகிச்சையால் மனைவி மற்றும் குழந்தையை இழந்து விட்டேன். எனவே,  தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த தனது மனைவி, குழந்தை சாவுக்கு விசாரணை நடத்தி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கலெக்டர் பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பயிர்களை அழிக்கும் படையப்பா மூணாறு விவசாயிகள், மக்கள் பீதி