×

திருப்பரங்குன்றம் கோயிலின் உண்டியல் வசூல் ரூ.26 லட்சம்

திருப்பரங்குன்றம், ஆக.14: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. கோயில் துணை ஆணையர் (பொ) மாரிமுத்து முன்னிலையில் எண்ணிக்கை நடைபெற்றது. இந்த பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டனர். உண்டியலில் 193 கிராம் தங்கம், ஒரு கிலோ 614 கிராம் வெள்ளி மற்றும் ரொக்கமாக ரூ.25 லட்சத்து 94 ஆயிரத்து 420 கிடைத்தது.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...