×

பாதை பராமரிப்பு பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை, ஆக. 14: ரயில் நிலையங்களுக்கிடையே ரயில்பாதை பராமரிப்பு பணிகள் நடப்பதால், ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை ேகாட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வீராசுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை:
விருதுநகர் - சாத்தூர், திருப்பரங்குன்றம் - கள்ளிக்குடி ராமநாதபுரம் - உச்சிப்புளி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இவ்வழித்தடங்களில் ரயில் போக்குவரத்தில் கீழ்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பாலக்காடு - திருச்செந்தூர் (வண்டி எண் 56769), திருச்செந்தூர் - பாலக்காடு (வண்டி எண் 56770) ஆகிய ரயில்கள் நாளை (ஆக. 15) முதல் வரும் 31ம் தேதி வரை, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விருதுநகர் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த இரு ரயில்களும் ஆக. 15 முதல் வரும் 31ம் தேதி வரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும், மதுரை - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருச்செந்தூர் - பாலக்காடு ரயில் (வண்டி எண் 56770) ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகளுக்காக ஆக. 15 முதல் 31 வரை 145 நிமிடங்கள் தாமதமாக, மதுரையிலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும்.

இதே போல் தாம்பரம் - திருநெல்வேலி - தாம்பரம் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள் (வண்டி எண்கள் 16191/16192) நாளை (ஆக. 15) மட்டும், விருதுநகர் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில்  கோயம்புத்தூர் - நாகர்கோவில் ரயில்கள் (வண்டி எண்கள் 56319/56320) அன்று மட்டும் மானாமதுரை வழியாக சுற்று பாதையில் இயக்கப்படும். திருச்சிராப்பள்ளி - ராமேஸ்வரம் ரயில் (வண்டி எண் 56829) வரும் ஆக. 24ம் தேதியும், ஆக.27 முதல் 31ம் தேதி வரை, ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் 42 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு 35 நிமிடங்கள் தாமதமாக ராமேஸ்வரம் சென்று சேரும். திருச்சிராப்பள்ளி-  ராமேஸ்வரம்-திருச்சிராப்பள்ளி ரயில்கள் (வண்டி எண்கள் 56829/56830) ஆக. 14, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில், மானாமதுரை-ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மதுரை-ராமேஸ்வரம்-மதுரை ரயில்கள்(வண்டி எண்கள் 56721/56722) ஆக. 14 ம் தேதி மட்டும், மானாமதுரை-ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இவ்வாறு ெதரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...