×

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி, ஆக.14: கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளரும், தேவராஜ் குரூப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான மதியழகன் பிறந்த நாள் வரும் 16ம் தேதி கொண்டாடப்பட்ட உள்ளது. விழாவினை மாவட்ட இணை செயலாளர்கள் கே.வி.எஸ்.சீனிவாசன், எஸ்.கே.கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலும், மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஆர்ஆர் முத்து முன்னிலையில் நடைபெற உள்ளது. பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் ஸ்ரீராகவேந்திரர் கோயில்,  பெருமாள்கோயில், நரசிம்மன்கோயில், கிரிஜாம்பாள்கோயில், பெரிய மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை, மற்றும் அன்னதானம், ஏழைகளுக்கு வேஷ்டி, சேலை, மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகம், இனிப்புகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

ஏற்பாடுகளை மாவட்ட பொறுப்பாளர்கள் ரஜினிகுமார், சுப்புலெட்சுமி, பாபாமாதையன், கேசவன், கோவிந்தராஜ், விஜயகுமார், நாராயணன், சேலம்பாஷா, எல்லப்பன், ஜெகவீரபாண்டியன், பாண்டியன் மற்றும் ஓன்றிய பொறுப்பாளர்கள் கிருஷ்ணன், செல்வராஜ், கோவிந்தசாமி, மணி, பழனி, ராஜீ, சரவணன், கிருஷ்ணன், நந்தீஷ், கேசவன், மஞ்சுநாத், சோமசுந்தரம், ரவி, மாணிக்கம், லட்சுமணன், கோவிந்தன், ராஜேஷ், காளியப்பன், சுப்பிரமணி, பாபுகாந்த், செந்தில், கணேசன் ஆகியோர் செய்துள்ளனர். மேலும், நகரம் சார்பில் ராகேஷ், ஹரீஷ், ெஜயேந்திரன், சிவா, வெங்கடேசன், சந்தோஷ், ரியாஸ், காமராஜன், அண்ணாதுரை, பாஸ்கர், சின்னசாமி, மாதுமுத்து, கார்த்திக்சந்தர் ஆகியோரும் செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு