×

குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி காலி குடத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு

நாமக்கல், ஆக.14: குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி, காலி குடத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தனர்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று பொட்டணம்புதூர் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஆசியாமரியத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதன் விபரம்: பொட்டணம்புதூர் கிராமத்தில் தற்போது 4 நாட்களுக்கு ஒருமுறை குறைந்த  அளவே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.இங்குள்ள ஆழ்துளையின் மின்மோட்டார் பழுது காரணமாக, மற்ற உபயோகத்துக்கான தண்ணீரை பெற முடியவில்லை. இதனால் காசு கொடுத்து அனைத்து உபயோகத்துக்கான தண்ணீரை வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுபோல் எருமப்பட்டியை அடுத்த காவக்காரன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் ஆசியாமரியத்திடம் வழங்கிய கோரிக்கை மனு விபரம்:காவக்காரன்பட்டியில் ஊருக்கு பொதுவாக உள்ள மயானத்துக்கு செல்லும் வழியில், தற்போது குட்டை அமைத்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் உடலை மயானத்துக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை. எனவே மயானம் செல்ல பாதை அமைத்துத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

நாமகிரிப்பேட்டையை அடுத்த அரியாகவுண்டம்பட்டி கொங்களம்மன் கோயில் கிழக்கு  தெருவில் வசிக்கும் 20க்கும் மேற்பட்டோர் பெண்கள் கலெக்டர் ஆசியாமரியத்தை  சந்தித்து முதியோர் உதவித்தொகை   ட்டு மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள்  கூறுகையில், முதியோர் உதவித்தொகை கேட்டு பல முறை மனு அளித்தும்  இதுவரை  கிடைக்கவில்லை.  தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என தொடர்ந்து  நடந்து வருகிறோம். முதியோர் உதவித்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றனர்.₹6 கோடி மதிப்பில் 55 இடங்களில் போர்வெல் நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர்  பற்றாக்குறையை போக்க 55 இடங்களில் புதிதாக ஆழ்துளை குழாய் கிணறு சுந்தரம்  எம்பி பரிந்துரையை ஏற்று அமைக்கப்படுகிறது. இதற்காக ₹6  கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது. எலச்சிபாளையம், எருமப்பட்டி ஒன்றியத்தில்  தலா இரண்டு  இடங்களிலும், கபிலர்மலையில் 3 இடத்திலும்,  மல்லசமுத்திரத்தில் 4  இடத்திலும், மோகனூரில், ஒரு இடம், நாமகிரிப்பேட்டையில் இரண்டு இடம்,  நாமக்கல்லில், 6 இடத்திலும், பரமத்தியில் இரண்டு இடத்திலும், ராசிபுரத்தில்  25 இடங்களிலும், சேந்தமங்கலத்தில் 5 இடங்களிலும், வெண்ணந்தூரில் 3இடங்கள்  என மொத்தம் 55 இடங்களில் புதிய போர்வெல் அமைக்க இடம் தேர்வு  செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ராசிபுரம் ஒன்றியம்,  ஆர்.கவுண்டம்பாளையத்தில், புதிதாக ஆழ்துளை அமைக்கும் பணியை சுந்தரம் எம்பி  தொடங்கி வைத்தார்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி