×

10ம் வகுப்பு ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் விநியோகம்

புதுச்சேரி, ஆக. 14: தமிழகம்,  புதுவையில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்  நடைபெற்று மே மாதம் ரிசல்ட் வெளியிடப்பட்டது. அப்போது தற்காலிக மதிப்பெண்  சான்றிதழ் வழங்கப்பட்டு உயர்கல்வி சேர்க்கை, மேல்நிலை வகுப்பு சேர்க்கை  ஆகியவை நடைபெற்றன. அதன்பிறகு பிளஸ்2 பொதுத்தேர்வு ஒரிஜினல் மதிப்பெண்  சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் விநியோகிக்கப்பட்டன. இதனிடையே தற்போது 10ம்  வகுப்பு பொதுத்தேர்வு ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் தமிழக கல்வி  வாரியத்திடமிருந்து புதுச்சேரி கல்வித்துக்கு வந்துள்ளது. அவை அனைத்தும்  இன்று ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அவற்றை அந்தந்த பள்ளி  நிர்வாகங்கள் சரிபார்த்து ஒப்புகை கையெழுத்திட்டபின் 20ம்தேதி முதல்  ஒவ்வொரு பள்ளிகளிலும் விநியோகிக்கப்பட உள்ளது.

இதனிடையே 10ம் வகுப்பு  ஒரிஜினல் மதிப்பெண் கிடைக்கப் பெற்ற மாணவ- மாணவிகள் அதை வேலைவாய்ப்பு  அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு வசதியாக அந்தந்த பள்ளிகளில் சென்டர்கள்  அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பதிவு செய்யாதவர்கள் ஆதார் கார்டு நகல்,  மதிப்பெண் (ஒரிஜினல்) சான்றிதழ், பிக் பார்ம் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து  தட்டாஞ்சாவடியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து  கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  

இதுதொடா–்பாக கல்வித்துறை  வட்டாரத்தில் விசாரித்தபோது, புதுவையில் கடந்த கல்வியாண்டில் மொத்தம்  17,500 மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில் அவர்களின்  மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளுக்கு நாளை (இன்று) முதல் அனுப்பி  வைக்கப்படும். சுதந்திர தினத்தையொட்டி 15ம்தேதி முதல் 19ம்தேதி வரை (5  நாட்கள்) தொடர் விடுமுறை வருவதால் அவற்றை 20ம்தேதி முதல் அந்தந்த  பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.ஊர் தலைவர் மீது சரமாரி தாக்குதல்பாகூர், ஆக. 14: மதுக்கடையில் தண்ணீர் தெறித்ததால் ஏற்பட்ட பிரச்னையில் ஊர் தலைவருக்கு பீர் பாட்டில் அடி விழுந்தது. தட்டிக்கேட்டவர்களும் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் அருகே சமட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தி (52), ஊர் தலைவர். இவர் நேற்று முன்தினம் பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் உள்ள ஒரு மதுக்கடைக்கு மது அருந்த வந்துள்ளார். அங்குள்ள ஒரு டேபிளில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்
தார்.

மதுவில் தண்ணீர் கலக்க வாட்டர் பாக்கெட்டை பல்லால் கடித்துள்ளார். அப்போது எதிர் டேபிளில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்த சோரியாங்குப்பத்ைத சேர்ந்த திருஞானம் (32), முருகராஜ் (25), வைத்தி (30) ஆகியோர் மீது தண்ணீர் தெறித்துள்ளது. அவர்களிடம் சிவமூர்த்தி மன்னிப்பு கேட்டுள்ளார்.ஆனால் ஆத்திரம் அடைந்த திருஞானம் உள்ளிட்டோர் பீர் பாட்டிலை உடைத்து சிவமூர்த்தியை தாக்கியுள்ளனர். மேலும் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து சரமாரியாக அடித்துள்ளனர். இதை கண்ட கடலூரை சேர்ந்த ராஜசேகர், சிலம்பரசன் ஆகியோர் தடுக்க முயன்றபோது, அவர்களையும் தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த ராஜசேகர், சிலம்பரசன், சிவமூர்த்தி ஆகியோர் பாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் பாகூர் போலீசில் ராஜசேகர் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த போலீசார், திருஞானம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் பாகூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...