×

வேளாண்மை இயக்கத்தின் இயந்திர மையங்கள்

பெரம்பலூர்,ஆக.13: நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் அரசு மான்ய உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் மதிப்புக்கூட்டும் இயந்திர மையங்களை பெரம்பலூர் கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் கல்பாடி மற்றும் பேரளியில் தலா ரூ.10லட்சம் அரசு மானிய நிதி உதவியுடன் கூடிய ரூ.13 லட்சம் மதிப்பிலான மதிப்புக்கூட்டும் இயந்திர மையங்களை பெரம்பலூர் கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின்கீழ் 2016-17ம் ஆண்டில் கல்பாடி, கொளக்காநத்தம், மருவத்தூர், வேப்பூர், பசும்பலூர், வெண்பாவூர் ஆகிய 6 தொகுப்பிலும் ஒவ்வொரு தொகுப்புகளிலும் நுழைவு முகப்பு பணிக்காக ரூ.5 லட்சம் மதிப்பில் தடுப்பணையுடன், மழைநீர் சேகரிப்புக் கட்டு மானங்களான வயல்வரப்புகள், பண்ணைக் குட்டைகள் உள்ளிட்டவைகள் மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த 6 தொகுப்பிலும் தலா ரூ.8 லட் சம் அரசு மான்ய உதவியுடன்கூடிய தலா ரூ.11.75 லட்சம் மதிப்பீட்டில் கிராம அளவிலான வாடிக்கையாளர் இயந்திர சேவை மையம் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு இயந்தி ரங்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. பேரளி, மருவத்தூர், கல்பாடி ஆகியதொகுப்புகளில் ரூ10லட்சம் அரசு நிதிஉத வியுடன் மதிப்புகூட்டும் இயந்திரமையம் அமைக்கப்பட்டு வருகின்றன. நபார்டு வங்கி யால் அமைக்கப்பட்ட பேரளி சிறுதான்ய விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலமாக  மருவத்தூர் தொகுப்பில், பேரளி கிராமத்தில் பழைய அரசுக் கட்டிடத்தில் மையம் செயல்படவுள்ளது. இம்மையத்திற்கு கல்நீக்கும் இயந்திரம், பருப்பு தோல் நீக் கும் இயந்திரம், கடலை உடைக்கும் இயந்திரம், நெல் உமிநீக்கும் இயந்திரம் ஆகிய இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன. இயந்திரங்களை இயக்குவதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றன. மருவத்தூர் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் இம்மையத்தை பயன்படுத்திக் கொள்ளளாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...