×

அந்தியூர் குருநாதசாமி கோயில் தேர்த்திருவிழா

ஈரோடு, ஆக. 7: மாவட்ட எஸ்.பி சக்திகணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோயில் தேர்த் திருவிழா 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்த்திருவிழா முன்னிட்டு வௌ்ளைபிள்ளையார் கோயில் கிழபுறம், படுவக்காடு, கிருஷ்ணாபுரம் கரைப் பெருமாள் கோயில் அருகில், வனக்கோவில் மேல்புறம் உள்ள அய்யன் தோட்டம்  ஆகிய 4 இடங்களில் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதே போல போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.  இதன்படி சேலம், ஈரோடு, மேட்டூர் மற்றும் பவானி மார்க்கத்தில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அண்ணாமடுவு மற்றும் அந்தியூர் பஸ் நிலையம் வழியாக பா்கூர் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனை கார்னர் வந்து வௌ்ளைப்பிள்ளையார் கோயில் அருகில் கிழபுறம் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி செல்ல வேண்டும். சேலம், ஈரோடு, மேட்டூர் மற்றும் பவானி மார்க்கத்தில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள மந்தை ரோடு வழியாக சென்று ஆலமரம் பிரிவில் படுவக்காடு என்ற இடத்திலும்.சத்தி, கோபி மற்றும் அத்தாணி வழியாக வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சின்னத்தம்பி பாளையம் பிரிவு அருகே பிரிந்து தங்கப்பாளையம், மைக்கேல்பாளையம், மந்தை ரோடு வழியாக படுவக்காடு வாகனம் நிறுத்தும் இடத்திலும், கா்நாடகா மாநிலத்தில் இருந்தும், பா்கூர் மலைப்பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ராமகவுண்டன் கொட்டாயிலிருந்து வலது புறம் திரும்பி வட்டக்காடு, மந்தை ரோடு வழியாக வனக்கோயிலுக்கு மேற்புறம் உள்ள அய்யன் தோட்டத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...