×

இன்று உலக யோகா தினம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்

மதுரை, ஜூன் 21: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் ஹைடெக்காக மாற்றப்படுகிறது. இதற்கான மாதிரி வரைபடத்தை மாநகராட்சி தயாரித்துள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக, அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அழகரின் அருளை பெறுகின்றனர். அழகர்கோவில் மலையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் மேளதாளம், அதிர்வேட்டு முழங்க, பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளக்க, சுந்தரராஜ பெருமாளாக மதுரைக்கு புறப்படுவார்.  பொய்கைகரைபட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தர்ராஜன்பட்டி, கடச்சனேந்தல் உள்ளிட்ட வழியிலுள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மூன்றுமாவடி வரும் அழகரை வணங்கி மதுரைக்கு வருமாறு எதிர்கொண்டு பக்தர்கள் அழைக்கும் எதிர்சேவை நடைபெறும். இறுதியில்,  அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகை ஆற்றில் இறங்குவார். வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால், அவர் இறங்கும் இடத்தை மாநகராட்சி சீரமைக்கும். தண்ணீரே வராத காலங்களில் தொட்டிப்பாதை கட்டப்படும். அதனைச் சுற்றிலும் ரூ.1 கோடி வரை செலவில் மாநகராட்சி சீரமைக்க நேரிடும்.

தற்போது இந்த இடத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாநகராட்சி சேர்த்துள்ளது. இதற்காக மாதிரி வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,500 கோடி செலவில் ஆயிரம் ஏக்கர் இடங்களை ஹைடெக்காக மாற்ற திட்டமிட்டுள்ளது. பெரியார் பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட பல பகுதிகள் விரைவில் மாற்றப்பட இருக்கிறது. அத்துடன் அழகர் இறங்கும் வைகை ஆற்றுப்பகுதியும் ஹைடெக்காக முற்றிலுமாக உருமாற்றப்பட இருக்கிறது. அழகர் இறங்கும்  வைகைக்கரை சாலையில் பாலம் கட்டப்படுகிறது. அந்த பாலம் தனியாக பிரிந்து வைகை ஆற்றுக்குள் செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. முற்றிலும் உயர்தொழில்நுட்ப விளக்குகள் அங்கு பொருத்தப்படுகிறது. மொத்தத்தில் வெளிநாட்டை போல, அழகர் இறங்க இருக்கும் வைகை ஆற்றுப்பகுதி மாற உள்ளது.

* விளம்பி வருடம் ஆனி மாதம் 7ம் நாள், வியாழக்கிழமை, வளர்பிறை.                                                                
* திதி: அஷ்டமி காலை 9.01 மணி வரை; அதன் பிறகு நவமி.        
* நட்சத்திரம்: உத்திரம் காலை 6.26 வரை; பிறகு அஸ்தம் மறுநாள் பின்னிரவு 5.32 வரை அதன் பிறகு சித்திரை.
* யோகம்: மந்தயோகம் காலை 6.26 வரை; அதன் பிறகு சித்தயோகம்.
* நல்லநேரம்:  காலை மணி 9-12, மாலை 4-7, இரவு 8-9
மணி வரை.
* ராகுகாலம்: மதியம் 1.30 முதல் 3.00 மணி வரை.
* எமகண்டம்: காலை 6.00 முதல் 7.30 மணி வரை.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...